காலத்திற்கு ஏற்றவாறு இளம் இயக்குனர்கள் நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் லோகேஷ், அட்லீ, நெல்சன், ஹெச். வினோத்தை தொடர்ந்து இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இவர் முதலில் நடிகர் ஜெயம் ரவியை வைத்து “கோமாளி” என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார்.
முதல் படமே வெற்றி படமாக அமைந்தது எடுத்து பிரதீப் ரங்கநாதனின் இரண்டாவது படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. இவர் இயக்கிய நடித்த திரைப்படம் தான் லவ் டுடே இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிக நாட்கள் ஓடி 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி கண்டது.
இந்த படம் இந்த காலத்திற்கு தேவையான படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல வாய்ப்புகள் குவிந்துள்ளது மேலும் சத்ய ஜோதி பிலிம்ஸ் உடன் இணைந்து பிரதீப் ரங்கநாதனும் ஒரு படம் பண்ண இருக்கிறார் இந்த நிலையில் திரையில் வெளிவந்த வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தை பார்த்து விட்டு..
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுகளை போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. விடுதலை படம் தரமான ஒரு கதையில் வெளிவந்த படமாகும் மேலும் படத்தை எடுத்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு எனது நன்றிகள் என வாழ்த்தியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பிரதீப் ரங்கநாதனை விமர்சிக்க ஆரம்பித்தனர்.
காரணம் வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு மரியாதை கொடுக்காமல் வெறும் பெயரை மட்டும் போட்டு பதிவிட்டு இருப்பது சுத்தமாக தாங்கிக் கொள்ள முடியவில்லை எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது