கோமாளி திரைப்படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோ தான் – உண்மையை பகிரும் பிரதீப் ரங்கநாதன்.

komali
komali

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி இவர் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் காலப்போக்கில் இவர் வித்தியாசம் மற்றும் ஆக்சன் திரைப்படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்தார் அந்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான்.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. இந்த திரைப்படத்தில் கோமாளியாக இருந்து ஜெயம் ரவி மீண்டு வந்து அவர் பண்ணும் லூட்டிகள் தான் படமாக எடுக்கப்பட்டிருந்தது படம் செம்ம சூப்பராக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது.

கோமாளி திரைப்படத்தில் அவருடன் கைகோர்த்து காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா, கே எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கி வெற்றி கண்ட பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்னும் படத்தையும் இயக்கி நடித்தார்.

இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தை தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரதீப் ரங்கநாதன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அப்பொழுது அவர் சொன்னது கோமாளி திரைப்படம் முதலில் ஜெயம் ரவி காண படமே கிடையாது இந்தப் படத்தின் கதையை பல ஹீரோக்களிடம் கூறியிருந்தேன்.

ஆனால் பிரபுதேவாவுக்கு அந்த கதை பிடித்து போய் நடிப்பதாக சம்மதம் தெரிவித்தார் ஆனால் நடிக்க ஓகே சொன்ன அவர் கால்ஷீட் தராமல் இழுத்து கொண்டே இருந்தார். ஏனென்றால் அந்த சமயத்தில் பிரபு தேவா தேவி 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது கடைசியாக ஜெயம் ரவியை சந்தித்து இந்த படத்தின் கதையை கூறினாராம்.