“லவ் டுடே” படத்தின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதனுக்கு சம்பளம் உயர்வு.. எத்தனை கோடி தெரியுமா.?

pradeep renganathan
pradeep renganathan

2019 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்னும் படத்தை இயக்கி தமிழ் சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்தது மேலும் இந்த படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்தார்

அதனை தொடர்ந்து கடந்த வருடம் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து பிரதீப் ரங்கநாதன் இயக்கிய திரைப்படம் லவ் டுடே. இந்த காலகட்டத்தில் நடக்கும் பல உண்மை சம்பவங்களை படமாக அவர் எடுத்திருந்தார் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று செம்ம வசூல் வேட்டை நடத்தியது.

முதல் நாளே 4 கோடி வசூல் செய்த நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரித்தது. தமிழில் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்றதால் இந்த படம் பிற மொழிகளிலும் வெளியிடப்பட்டது அதனால் வசூலில் எதிர்பார்க்காத உச்சத்தை தொட்டது ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் 90 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது இந்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் 1.5 கோடி சம்பளம் வாங்கினார்.

அடுத்ததாக பிரதீப் ரெங்கநாதன் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் ஒரு படம் பண்ண இருக்கிறார் அந்த படத்தை இவர் இயக்குகிறார் ஆனால் நடிப்பாரா என்று தெரியவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் அந்தப் படத்திற்காக ஏஜிஎஸ் நிறுவனம் பிரதீப் ரங்கநாதனுக்கு அதிக சம்பளத்தை கொடுக்க இருக்கிறது என தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி பார்க்கையில் பிரதீப் ரங்கநாதனின் மூன்றாவது படத்திற்காக சுமார் 3 கோடி சம்பளம் வாங்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இணையதள பக்கத்தில் இந்த செய்தி தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.