சிம்புவின் பட வாய்ப்பை தட்டி தூக்கிய பிரதிப் ரங்கநாதன்.? இதுக்கு பேரு தான் அதிர்ஷ்டம் அடிச்சு தூக்குறதோ..

simbu-pradeep
simbu-pradeep

சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் இடைப்பட்ட காலத்தில் நடிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்ததால் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தார் அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பதற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை என பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் குற்றச்சாட்டு வைத்தார்கள். இந்த நிலையில் தற்பொழுது குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிம்பு படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைத்துள்ளார்.

மேலும் சிம்பு தற்போது மாநாடு, வேந்து தணிந்தது காடு என தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இந்த  நிலையில் சிம்பு அடுத்ததாக கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக தொடங்காமல் இருந்ததால் படத்திலிருந்து சிம்பு வெளியேறி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் இதுவரை படக்குழு எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் சிம்பு தற்பொழுது 10 தல என்ற திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.அதனால் இயக்குனர் கோகுல் கொரோனா குமார் என்ற திரைப்படத்தை ஓரம் கட்டி விட்டு ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்குவதற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய அப்டேட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது இந்த தகவல் சிம்பு ரசிகர்களிடையே வருத்தத்தை கொடுத்துள்ளது ஏனென்றால் சமீபத்தில் லவ் டுடே என்ற திரைப்படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதன் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் ஏனென்றால் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பத்து மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது.

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது ஆனால் இதுவரை படக்குழு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை விரைவில் இந்த தகவலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.