லேடி சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த பிரதீப் ரங்கநாதன்.! இயக்குனர் யார் தெரியுமா.?

nayanthara
nayanthara

தற்பொழுது தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், ஹீரோவாகவும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் பிரதீப் ரங்கநாதன். இளம் நடிகரான இவருக்கு தற்பொழுது தொடர்ந்து பல முன்னணி நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களும் இவருடைய படத்தின் நடிக்க விரும்பி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை லேடிஸ் சூப்பர் ஸ்டார் நடிக்க இருக்கிறார் எனவும் அந்த படத்தினை யார் இயக்க உள்ளார் என்பது பற்றிய தகவலும் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

இந்நிலையில் படத்தினை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளிவந்த லவ் டுடே படத்தினை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் களமிறங்கி அசத்தியிருந்தார். வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் ரூபாய் 90 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. இதன் மூலம் தயாரிப்பாளர் நல்ல லாபத்தை பெற்றார் மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இப்படிப்பட்ட நிலையில் பல நடிகர்கள் பிரதீப் ரங்கநாதனிடம் வாய்ப்பு கேட்டு வந்த நிலையில் தற்போது அவர் இயக்கப் போவதில்லை எனவும் மேலும் சில திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் விக்னேஷ் சிவன் தான் இயக்க உள்ளாராம் அதாவது அஜித்திற்காக ஏகே 62 பட கதையை உருவாக்கின நிலையில் ஆனால் அந்த படம் கைநழுவி போய்ள்ளது.

எனவே பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டு உள்ளாராம் இந்நிலையில் இந்த படத்தில் தான் நடிகை லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கிறார் எனவும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கவில்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.