தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனது கைவசம் வைத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி முன்னணி நடிகர்களே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு மெகா ஹிட் அடித்து விடுகிறது அந்த வகையில் ஒரு திரைப்படத்தை தானே இயக்கி அதில் தானே நடித்து வெற்றி கண்டவர் தான் பிரதீப் ரங்கநாதன்.
90 கிட்ஸ் வி எஸ் 2 k கிட்ஸ் என சமூக வலைதளத்தில் விவாத பொருளாக பலவற்றை நாம் பார்த்திருப்போம். இதை சரியாக பயன்படுத்தி 90 காலகட்டத்தில் எப்படி இருந்தோம் என்பதை தத்துவமாக தன்னுடைய முதல் திரைப்படத்தில் காட்டி இயக்கினார் கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்ட்டே, யோகி பாபு ஆகியோர்கள் கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் 90கிட்ஸ்களை கனெக்ட் செய்யும் விதமாக இருந்தது அது மட்டும் இல்லாமல் எமோஷன் காட்சிகளும் ரசிகர்களிடையே ஒர்க் அவுட் ஆனது. படம் வெளியாகி அதிரி புதிர் ஹிட் அடித்தது. முதல் திரைப்படத்தில் 90 காலகட்டத்தில் இருப்பதை போல் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தில் 2கே கிட்ஸ்கள் எப்படி இருப்பார்கள் என்பதை தன்னுடைய திரைக்கதை மூலம் வெளியே கொண்டு வந்துள்ளார்.
இரண்டாவது திரைப்படமான லவ் டுடே என்ற திரைப்படத்தில் தானே நடித்து இயக்கி மாபெரும் வெற்றியை ருசித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் ஹீரோ யார் என பல தயாரிப்பாளர்கள் கேட்ட நிலையில் தான் ஹீரோ எனக் கூறி தயாரிப்பாளர்களை வாயை பிளக்க வைத்துள்ளார். ஆனால் ஒரு வழியாக ஒரு தயாரிப்பாளரை உறுதி செய்து படத்தையும் எடுத்தார் அந்த நிறுவனம்தான் ஏஜிஎஸ் நிறுவனம்.
லவ் டுடே என்ற திரைப்படத்தில் பிரதீப்ரங்காநதான் ஹீரோவாக நடித்திருந்தார் அதனை தொடர்ந்து இவ்வானா சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகி பாபு ரவீனா ரவி என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது வெறும் ஐந்து கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட நூறு கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.
மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதால் இந்த திரைப்படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதனுக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் பிரதீப் ரங்கநாதன் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கல்லூரி பின்னணியை மையமாக வைத்து கதை உருவாக்க இருக்கிறது. இதற்காக கதை எழுதுவதில் முன்புறமாக இருந்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
இந்த திரைப்படமும் 2கே கிட்ஸ் கதை போல இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.