விக்னேஷ் சிவனுக்கு டேட்ஸ் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்.! டேட்சை வைத்து ஃபன் ப்ரோமோ வீடியோ

vignesh shivan

Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கும் நிலையில் அது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பே செய்திகள் இணையதளத்தில் வெளியானது.

இந்நிலையில் தற்பொழுது இந்த படம் குறித்த ப்ரோமோ வீடியோவை பிரதீப்புடன் இணைந்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இதனை தொடர்ந்து நானும் ரவுடிதான் படத்தினை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

பிறகு நடிகர் அஜித்தின் ஏகே62 திரைப்படத்தினை இவர்தான் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் நயன்தாரா, சந்தானம் உள்ளிட்டவர்களும் நடிக்க இருந்தனர் இந்நிலையில் ஏகே 62விலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். இதன் காரணமாக அஜித்தின் அடுத்த படத்தினை மகிழ் திருமேனி இயக்கம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

vignesh shivan
vignesh shivan

ஆனால் தற்பொழுது வரையிலும் படத்தின் ஷூட்டிங் நடைபெறவில்லை. இதற்கிடையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் தன்னுடைய அடுத்த படத்தினை உருவாக்க உள்ளார். அப்படி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தின் அறிவிப்பை ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் விக்னேஷ் சிவனுக்கு பிரதீப் சாப்பிடும்  டேட்சை கொடுக்கிறார் இதன் மூலம் விக்னேஷ் சிவன் படத்திற்கு அவர் டேட்ஸ் கொடுத்துள்ளதை மறைமுகமாக விக்னேஷ் சிவன் இந்த வீடியோவில் குறிப்பிட்டார். சரியான நேரத்தில் தன்னை பிரதீப் காப்பாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன் தேங்க்யூ ஃபார் தி டேட்ஸ் என்றும் இந்த டேட்சை வைத்து ஃப்ன் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.