முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் பிரதீப்.. வெறும் 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா.?

love-today
love-today

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் லவ் டுடே. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரதிப் ரங்கநாதன். இவர்தான் தற்பொழுது லவ் டுடே திரைப்படத்தினை இயக்கி நடித்திருக்கிறார்.

மேலும் இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்கியிருந்தார். இந்நிலையில் சி இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் படத்திற்கு போட்டியாக லவ் டுடே திரைப்படம் வெளியானது இவ்வாறு பெரிய இயக்குனரான சுந்தர் சியின் படத்தில் கிடைக்காத வரவேற்பு இளம் இயக்குனர் பிரதிப்புக்கு கிடைத்துள்ளது.

தற்பொழுது இந்த காலத்தில் காதல் எப்படி இருக்கிறது அது எதனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதனை தெள்ளத் தெளிவாக இந்த படம் காட்டி இருக்கிறது. எனவே தற்பொழுது உள்ள இளசுகளின் மனதை பெருதளவில் கவர்ந்துள்ளது. காமெடி, கலாட்டா என உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் ஏராளமான திரையரங்குகளில் இந்த திரைப்படம் ஒளிபரப்பாகப்பட்டு வருகிறது இப்படிப்பட்ட நிலையில் மொத்தமாக லவ் டுடே படம் 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி முதல் நாளில் மூன்று கோடி வசூல் செய்தது. அதன் பிறகு கிடைத்த நல்ல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

எனவே வெளியாகி கிட்டத்தட்ட தற்பொழுது 5 நாட்களில்  20 கோடி வசூலை அள்ளியது. மேலும் இதனைத் தொடர்ந்து நேற்றுடன் பத்து நாள் பத்து நாட்களை நெருங்கி உள்ள நிலையில் 50 கோடி வசூலை பெற்றுள்ளது லவ் டுடே படம். இவ்வாறு தற்பொழுது உள்ள பல முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக லவ் டுடே படத்தின் மூலம் பிரதீப் டப் கொடுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்னும் குறுகிய நாட்களில் 100 கோடி வசூல் செய்தால் கூட ஆச்சரியப்படத் தேவையில்லை.