பிரபுதேவாவை நம்பி பல லட்சம் நஷ்டம் அடைந்தேன் என இணையத்தில் புலம்பிதள்ளும் தயாரிப்பாளர்..!

prabudev

prabudeva latest news: சமிபத்தில் பல தயாரிப்பாளர்கள் பல பிரபலமான நடிகர்களை வைத்து திரைப்படம் எடுத்து நஷ்டம் அடைந்ததை மீடியாவின் முன்பு நின்று வெளிப்படையாகப் பேசியது ஏராளம். அந்த வகையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் ஒரு தகவலை பேசியுள்ளார்.

அந்த வகையில் நானும் சிங்கிள் தான் என்ற படத்தினை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் புகழ்ந்து பேசியது மட்டும் அல்லாமல் வாழ்த்தியுமுள்ளார்கள் இந்நிலையில் கே ராஜன் எனக்கு ஒரு திரைப்படத்தின் மூலமாக 85 லட்சம் வரை நஷ்டம் அடைந்து விட்டது என அனைவருடைய முன்னிலையிலும் கூறியுள்ளார்.

அதாவது அவர் கூறியது என்னவென்றால் நானும் சிங்கிள் தான் என்ற திரைப்படத்தின் மூலமாக தான் நான் முதன்முதலில் அறிமுகமானேன் அதன் பின்பு பிரபுதேவாவை வைத்து டபுள்ஸ் எனும் திரைப்படத்தை நான் தயாரித்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் பிரபுதேவா மீனா மற்றும் சங்கீதா ஆகியவர்கள் நடித்துள்ளார்கள்.  மேலும் இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் இருவரும் முதலில் சிங்கிளாக தான் இருப்பார்கள் பின்னர் இவர்கள் ஒன்றிணைந்து டபுள் சாக மாறுவார்கள் இந்த கதை எனக்கு பிடித்ததன் மூலமாக படம் ஹிட்டு கொடுக்கும் என நினைத்தேன்.

ஆனால் எனது எதிர்பார்ப்பு அனைத்தும் எனக்கு மாறாக அமைந்துவிட்டது. ஆகையால் இந்த திரைப்படத்தின் மூலமாக எனக்கு 85 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுவிட்டது இதனால் எனக்கு திரைப்படம் தயாரிப்பதற்கான எண்ணமே வராமல் போய்விட்டது என கூறியுள்ளார்.