விஜய் 66 படத்தில் இணைந்த பிரபு – எந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் தெரியுமா.? தவிக்கும் ரசிகர்கள்.

vijay-and-prabhu
vijay-and-prabhu

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவரான விஜய் கடைசியாக இயக்குனர் நெல்சன் உடன் கைக்கோர்த்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை மக்களுக்கு கொடுத்து இருந்தார். இந்த படம் வெளிவருவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் படம் வெளிவந்து.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை. இந்த படத்தின் கதை சுவாரஸ்யம் இல்லாமலும் லாஜிக் மீறல் போன்ற பல குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் வைத்து வந்தனர்  இருந்தாலும் பீஸ்ட் படம் வசூலில் குறைச்சல் இல்லாமல் சிறந்து விளங்கியது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் உடனடியாக தனது அடுத்த படத்தில் கமிட்டாகி உள்ளார்.

விஜய்யின் அடுத்த 66 வது படத்தை இயக்குனர் வம்சி மற்றும் தில் ராஜு தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடிகையாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். அவரை அடுத்து நடிகர் சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் இதில் விஜய்க்கு இரண்டு அண்ணன்களாம் அதில் ஒரு அண்ணனாக நடிகர் ஷ்யாம் தேர்வாகியுள்ளார்.

மற்றொரு அண்ணன் யார் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பமாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபுவும் நடிக்க உள்ளார். ஆனால் அவரது கதாபாத்திரம் குறித்து தான் எந்த தகவலும் இன்னும் வெளிவரவில்லை ரசிகர்கள் பலரும் பிரபு விஜய்க்கு அண்ணனாக நடிப்பாரா என எதிர்பார்க்கின்றனர்.

அப்படி விஜய்க்கு அண்ணனாக நடித்தால் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடிக்க இருந்தால் பிரபுவுக்கும் சரத்குமார் அப்பாவாக நடிக்க முடியாது. இதனால் பிரபுவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பலரும் குழம்பி வருகின்றனர். தளபதி 66 படத்தில் பிரபுவின் கதாபாத்திரம் குறித்து படக்குழு வெளியிட்டால்தான் தெரியும்.