Vijay : லியோ படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் “தளபதி 68” படத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நேற்று இந்த படத்தின் பூஜை கோலாகலமாக போடப்பட்டது. அதே நாளில் மற்றொரு அறிவிப்பும் வெளியானது.
லியோ படத்தின் டிரைலர் குறித்து அப்டேட் வெளிவந்தது அதன்படி வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி லியோ டிரைலர் வெளியாக இருக்கிறது. தளபதி விஜய் சினிமாவில் ஒரு கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டால் அந்த படத்தின் ஷூட்டிங் முடியும் வரை இயக்குனரிடம் தலையிடவே மாட்டார் தான் வேலை உண்டு என இருப்பார்.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் அதை முடித்துக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் அப்படி போக்கிரி படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பார்ப்போம்.. 2007 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் திரைப்படம் போக்கிரி இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய் – அசினுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டுமாம்.
ஆனால் அப்பொழுது விஜய் கேரவன் பின்னாடி சென்று வந்து கொண்டே இருந்தார். இதை கவனித்த பிரபுதேவா தனது உதவியாளரை கூப்பிட்டு விஜய் அங்க என்ன செய்கிறார் என பார்த்துவிட்டு வா என அனுப்பினாராம் அங்க போய் பார்த்தால் விஜய் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் இதை தெரிந்து கொண்ட பிரபுதேவா என்ன ஆச்சு என விஜய்யிடம் கேட்க கடுமையான காய்ச்சல் அதனால் வாந்தி என விஜய் சொல்ல..
நாளைக்கு ஷூட்டிங் வைத்துக் கொள்ளலாம் என பிரபு தேவா உடனே சொன்னாராம் ஆனால் விஜய் அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை இன்னைக்கே படப்பிடிப்பு வைத்துக் கொள்ளலாம் என சொல்லி சூட்டிங் ஆரம்பித்துள்ளனர். அந்த நேரத்திலேயும் அசினுக்கு இணையாக விஜய் நடித்து கொடுத்துவிட்டு தான் பின் கிளம்பினாராம்.