சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை மஞ்சு வாரியார் இவர் மலையாள திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சிறந்த நடிப்பு திறமையினால் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் திலீப் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் இவர் தற்பொழுது தமிழ் உள்ளிட்ட ஏழு மொழிகளில் உருவாகி வரும் படம் ஒன்றின் பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார்.
இவருக்கு அழகாக நடனம் கற்று தரும் நடன இயக்குனர் பிரபுதேவாவின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது மஞ்சு வாரியார் ஆய்ஷா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, அரபு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொத்தம் ஏழு மொழிகளில் உருவாகிறது அமீர் பல்லிக்கல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜெயச்சந்திரன் எம் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர் அரபி மொழியும் கலந்து உருவாகும் இந்த பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த நிலையில் அந்த பாடலுக்கு நடன இயக்குனர் பிரபு தேவா பணியாற்றியுள்ளார்.
எனவே இந்த பாடலில் நடன இயக்குனர் பிரபு தேவா மஞ்சு வாரியாரை அழகாக ஆட வைத்த காட்சிகள் தற்பொழுது வீடியோவாக வெளியாகி உள்ளது இந்த பாடலில் மஞ்சுவாரியாருடன் இணைந்து பிலிப்பைன்ஸ், நைஜீரியா, சிரியா, ஏமன் ஆகிய நாட்டைச் சேர்ந்த நடன கலைஞர்களும் நடனமாடிய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.