தமிழ் திரையுலகில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், டான்ஸ் மாஸ்டர் போன்ற எல்லா திறமைகளையும் கொண்டு வலம் வருபவர் தான் பிரபுதேவா.
இவரது நடிப்பு திறமையை பார்த்து கவர்ந்த ரசிகர்களோடு இவரது டான்ஸை பார்த்துக் கவர்ந்த ரசிகர்கள்தன் அதிகம் என்று கூறலாம். ஏனென்றால் இவர் திரைப்படங்களில் அவ்வளவு அருமையாக டான்ஸ் ஆடுவார்.
இவரைப் பற்றி சமீப காலமாகவே சினிமா வட்டாரத்தில் இருந்து கிசுகிசு எழும்பி வருகிறது.
அது என்னவென்றால் பிரபுதேவாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்று கிசுகிசு பலரும் எழுப்பி வருகிறார்கள். இது உண்மையாக கூட இருக்கலாம். பிரபுதேவா முன்பை சேர்ந்த மருத்துவர் ஹிமானி என்பவரை திருமணம் செய்து கொண்டாராம்.
இந்த திருமணம் அவரது வீட்டில் கடந்த மே மாதம் நடந்தது என்று தகாவல்கள் வெளிவந்துள்ளது. இந்தத் திருமணத்தைப் பற்றி கேட்பதற்காக பலரும் அவரின் மேனேஜரை தொடர்பு கொண்டபோது அவர் எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டாராம்.
அதேபோல் பிரபுதேவா வீட்டார்களிடமும் கேட்டபோது இந்த திருமணத்தை பற்றி ஒரு தகவலும் கூறாமல் இருந்தார்கலாம் என்றும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த திருமணத்தை பற்றிய பிரபுதேவா அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அறிவிப்பாரா என்று ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.