விஜயின் ஆசையை நிராகரித்த பிரபுதேவா..? காமெடி நடிகர்களை வைத்து ஸ்கெட்ச் போட்ட தளபதி.! என்ன நடந்தது தெரியுமா.?

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய்.  கடைசியாக பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை வெற்றிகரமாக  முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக லோகேஷ் உடனும் கைகோர்க்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது இப்படி இருக்கின்ற நிலையில் போக்கிரி படத்தில் ஒரு காட்சிக்காக விஜய் ரொம்பவும் பிடிவாதம் பிடித்துள்ளாராம் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் உருவான படம் போக்கிரி இந்த படம் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் அடித்தது.

இந்த படத்தில் காமெடி , சென்டிமென்ட், ஆக்சன் காதல் என அனைத்தும்.. கலந்ததாக இருந்ததால் ரசிகர்களின் தாண்டி அப்பொழுது பொது மக்களின் வெகுவாக கவர்ந்து இழுந்தது இந்த படத்தில் ஆரம்பத்தில் ஒரு intro பாடல் வரும் அந்த பாடலில் விஜய்யும், பிரபுதேவாவும் நடித்திருப்பனர். ஆனால் முதலில் அப்படி ஒரு பாடலே இல்லையாம்..

விஜய் தான் தனக்கு மாஸ்டர் உடன் ஒரு காட்சியில் நடித்து விட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளார். இதனை நடிகர் வையாபுரியுடன் சொல்லி உள்ளார் அவரோ இயக்குனர் பிரபு தேவாவிடம் கேட்க அவர் போங்கப்பா என்னால முடியாது என ஒரே நோ முடித்து விட்டார் ஆனால் வையாபுரியும், ஸ்ரீமனும் சேர்ந்து ஒரே மாதிரியான ஆடைகளை எல்லாம் தைக்க சொல்லிவிட்டனர்.

நடன இயக்குனரான அசோக்கிடம் இருவரும் ஆட ஒரு பிஜிஎம் இருக்கு நடனத்தை ரெடி செய்து வைக்குமாறு கூறிவிட்டோம்.. இதைத்தொடர்ந்து பிரபுதேவாவிடம் விஜயின் ஆசையை பொறுமையாக எடுத்து கூறி ஓகே வாங்கியதாக சமீபத்தில் வையாபுரி தெரிவித்தார் மேலும் பாடல் செம்மையா வந்தது ஆனால் நானும், ஸ்ரீமனும் அதுக்குபட்ட பாடு தான் அதிகம் என கூறினார்..