நடிகராகவும், நடன இயக்குனராகவும், திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் தன்மைகளை வைத்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடன இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமானார். இதன் மூலம் சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதன்பிறகு இவர் திரைப்படங்களில் இயக்க ஆசைப்பட்டதால் தொடர்ந்து இயக்குனராக வலம் வந்தார். அந்த வகையில் இடையில் நடிப்பதை நிறுத்திவிட்டு திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். மலையாளம், தெலுங்கு, தமிழ் 3 திரை உலகிலும் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் ஹீரோவாக ரீயேன்ரி என்று கொடுக்கும் வகையில் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் தமன்னா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த தேவி திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் இவரும் பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.இப்படிப்பட்ட நிலையில் இரண்டு வருடத்திற்கு முன்பு பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
அதன் பிறகு பணம் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இத்திரைப்படத்தை அப்படியே விட்டுவிட்டார்கள். இந்நிலையில் தற்போது பிரபுதேவா தயாரிப்பாளரை நேரில் சந்தித்து தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய முடியவில்லை ஓடிடியிலாவது ரிலீஸ் செய்யலினா எப்படி என்று கோபமாக பேசி உள்ளாராம்.