பிரபுதேவின் அடுத்த படத்தில் இவரா நடிகை.? எதிர்பார்ப்பை எகிரவைக்கும் தகவல்

prabhu
prabhu

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த படம் திரிஷா இல்லனா நயன்தாரா. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனாராக அறிமுகமானார். இப்படத்தின் ஹீரோவாக இசையமைப்பாளரும் ,நடிகரும்மாகிய ஜிவி பிரகாஷ் அவர்கள் நடிதுர்ந்தார். ஹீரோயினாக ஆனந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்புவை வைத்து அன்பானவன், அசராதவன் ,அடங்காதவன் என்ற படத்தை இயக்கியிருந்தார் இப்படம் தோல்விப் படமாக அமைந்தது

இதனைத்தொடர்ந்து அவர் தற்பொழுது தமிழ் சினிமாவின் நடன புயலான பிரபுதேவாவை வைத்து இயக்க உள்ளார் என தகவல் கசிந்தது இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக காதலர் தினத்தன்று தனுஷ் அவர்கள் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். படத்தை பரதன் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

இப்படத்தில் பிரபுதேவா அவர்கள் மொட்டை அடித்து வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார் என தகவல்கள் வெளிவருகின்றன. இப்படத்தில் யார் ஹீரோயின் என எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது இப்படத்தில் ஹீரோயினாக காயத்ரி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன இவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.