தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளை கொண்டவர் பிரபுதேவா இவர் நடிகர் மட்டுமல்லாமல் டான்ஸ் மாஸ்டர் இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்திய அளவில் சினிமா நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
மேலும் பிரபுதேவா நடித்த பல திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் பிரபலம் இந்த நிலையில் தற்போது பிரபுதேவா தெலுங்கு இயக்குனர் சரண் இயக்கத்தில் ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே பிரபுதேவா உடன் நடித்தவர் தான் அவர் வேறு யாரும் கிடையாது நடிகை கஜோல் தான் 27 வருடம் கழித்து மீண்டும் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் நஸீரூத்தின் ஷா, சம்யுக்தா மேனன் ஆகியோர்கள் நடிக்க இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் அட்லி அவர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ள ஜிகே விஷ்ணு இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் மேலும் புஷ்பா 2 திரைப்படத்திற்கு எடிட்டர் பணியாற்றியுள்ள நவீன் தான் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
பிரபுதேவா மற்றும் கஜோல் இணைந்து மின்சார கனவு என்ற திரைப்படத்தில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.