பிரபுதேவாவின் காதலன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள்தான்.! பல வருட ரகசியத்தை கசியவிட்ட இயக்குனர்

prabhu deva
prabhu deva

kadhalan Movie First Actor choice : 1994 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நக்மா, வடிவேலு, கிரிஸ் கார்னாட், ரகுவரன், எஸ் பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் காதலன், இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றதால் தெலுங்கிலும், ஹிந்தியிலும் மொழி பெயர்ப்பு செய்து ரிலீஸ் செய்தார்கள். அதுமட்டுமில்லாமல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நக்மாவிற்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

காதலை மையமாக வைத்து இந்தத் திரைப்படத்தின் கதை உருவானதால் அப்பொழுது உள்ள இளசுகள் இடம் மிகவும் பிரபலமடைந்தது, இந்த நிலையில் காதலன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய வசந்தபாலன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்தப் பேட்டியில் காதலன் திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது பிரசாந்த் மற்றும் பாலிவுட் நடிகையான மாதுரி தீக்ஷித் தான் முதன் முதலில் நடிக்க இருந்தார்கள், ஆனால் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தான் பிரபுதேவா தான் நடிக்க வேண்டும் என ஒற்றைக்காலில் நின்று பிரபுதேவாவை கமிட் செய்தார், ஆனால் மாதுரி இந்த திரைப்படத்திலிருந்து கால்ஷீட் பிரச்சனையால் விலகிக்கொண்டார், அதன் பிறகு பிரபுதேவாவுடன் நடிப்பதற்கு நக்மா விற்கு வாய்ப்பு கிடைத்தது.

kadhalan
kadhalan

இந்த திரைப்படம் வெளியாகி முதல் வாரத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ஓடவில்லை, அதன் பிறகு இரண்டாவது வாரத்திலிருந்து தான் நல்ல வரவேற்பு கிடைத்தது, அதன்பிறகுதான் வெற்றியும் பெற்றது, ஆனால் இந்த திரைப்படத்தில் பிரசாந்த் மற்றும் மாதுரி நடித்திருந்தால் இன்னும் வேற லெவலில் படம் இருந்திருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஏனென்றால் இவர்கள் இருவருக்கும் இடையே மிகப்பெரிய கிரேஸ் இருந்தது அனைவருக்கும் தெரிந்தது தான் அதுமட்டுமில்லாமல் அப்பொழுது பிரசாந்த் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பில் இருந்தார். எது எப்படியோ பிரபுதேவா மற்றும் நக்மா நடித்த இந்த திரைப்படம் ஹிட்டானது குறிப்பிடதக்கது.