நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர், இவரை தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸடார் என்று அழைத்து வருகிறார்கள், இவர் வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார் அதுவும் காதல் கஷ்டங்கள் தான் அதிகம், முதலில் அவர் சிம்புவை காதலித்தார் பின்பு அவர்களுக்கு ஏற்பட்ட சில பிரச்சனையால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.
அதன் பிறகு நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவை ஐந்து வருடம் காதலித்தார், இப்படி அடுத்தடுத்து நயன்தாரா காதலில் விழுவதற்கு காரணம் படவாய்ப்பு எங்கு குறைந்து விடுமோ என்ற பயம் தான், ஏனென்றால் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு வயது ஆகிவிட்டால் அவர்கள் அக்கா கதாபாத்திரமும் அம்மா கதாபாத்திரமும் தான் நடிக்க முடியும், ஆனால் நடிகர்கள் எப்பொழுதும் ஹீரோவாக தான் நடித்து வருகிறார்கள்.
5 வருடங்களாக காதலித்த பிரபுதேவாவை நயன்தாரா ஏன் கழட்டி விட்டார் என்ற காரணம் தற்போது தெரியவந்துள்ளது, பிரபுதேவா, நயன்தாரா மீது உள்ள காதலால் தனது மனைவியை விவாகரத்து செய்தார், அதன்பிறகு நயன்தாராவை மறுமணம் செய்துகொள்ளும் அளவிற்கு இறங்கிவிட்டார், பிரபுதேவா சிம்புவிடம் நயன்தாராவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை என அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்ததால் பிரபுதேவா மீது நயன்தாரா கடுப்பில் இருந்தார்.
பிரபுதேவாவும் அந்த விஷயத்தை விட்டபாடில்லை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார், அப்படியிருக்க நயன்தாராவிடம் தன்னுடைய இரண்டு மகன்களை விட்டுக்கொடுக்க முடியாது என கூறிவிட்டார், அவர்களும் நம்முடன் தான் இருக்க வேண்டுமென கூறினாராம், ஆனால் நயன்தாரா பின்பு நடக்க போவதை யோசித்து இன்னைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கு பிரச்சினை வரும் என கணித்து விட்டார், அதனால் ஒருபோதும் இதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.
அது மட்டுமல்லாமல் பிரபுதேவா மனைவியும் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் சண்டை போடுவார், என்னால் திரும்பத் திரும்ப சண்டை போட முடியாது என கூறி விட்டாராம், அதன்பிறகுதான் சோகத்தில் இருந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூற வந்தார் விக்னேஷ் சிவன். அப்பொழுது வந்த காதல் தான் இன்றுவரை தொடர்ந்து கொண்டே போகிறது, அதுமட்டுமில்லாமல் லிவிங் டுகெதர் வரை சென்றுள்ளது.
நயன்தாரா என்னதான் சர்ச்சையை சந்தித்தாலும் இன்றுவரை தமிழ் சினிமாவின் ராணியாக வலம் வருகிறார் என்பதே உண்மை, விக்னேஷ் சிவனுடன் இவர் ஊர் சுற்றி வருவது கொஞ்சமா நஞ்சமா அவர்களின் சமூகவலைதளத்தில் பார்த்தாலே அது அனைவருக்கும் தெரியம். ஆனால் இன்னும் இவர்கள் திருமணத்தை பற்றி பேசாமல் மௌனம் காத்து வருகிறார்கள் அதுதான் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.