இந்திய சினிமாவில் நடன இயக்குனராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. இவரை மைக்கேல் ஜாக்சன் என பலரும் புகழ்வார்கள். அந்த அந்த அளவு நடனம் ஆடுவதில் வல்லவர். படத்தை இயக்குவதை தாண்டி சமீப காலமாக தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் 1995 ஆம் ஆண்டு ரமலாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பிரபுதேவா மற்றும் அவருடைய முதல் மனைவி இருவருக்கும் இரண்டு மகன்கள் பிறந்தார்கள் இருவரும் 15 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள் 15 வருடங்களுக்குப் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள். பிரபுதேவாவின் முதல் மனைவி விவாகரத்தில் முடிந்ததற்கு காரணம் முழுக்க முழுக்க நயன்தாரா தான் என பிரபுதேவாவின் முதல் மனைவி புகார் ஒன்றை கொடுத்தார்.
ஒரு காலகட்டத்தில் பிரபுதேவா நயன்தாராவை தீவிரமாக காதலித்து வந்தார் அந்த காதல் திருமணம் வரை சென்றது, ஆனால் பின்பு பிரபுதேவாவின் முதல் மனைவி கொடுத்த புகாரால் பிரச்சனை ஏற்பட்ட பிரிந்து விட்டார்கள். அதன் பின்பு சிறிது காலம் கழித்து நயன்தாரா விக்னேஷ் சிவன் அவர்களை காதலிக்க தொடங்கினார் பின்பு அவர்கள் இருவரும் தற்பொழுது கல்யாணமும் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.
மேலும் நயன்தாரா தற்பொழுது ஷாருக்கானுடன் அட்லி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா பல வருடங்களுக்கு பிறகு 2020ல் ஹிமானி சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பிரபுதேவா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட இவரை இதுவரை மீடியா உலகிற்கு காட்டியதே கிடையாது முதல் முறையாக பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வீடியோ கால் மூலம் பேசி உள்ளார்.
கன்னட நிகழ்ச்சியில் ஹிமானி சிங் பேசிய வீடியோ இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி இவர்தானா என ஆச்சரியத்துடன் வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.
பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.!