தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து உள்ளவர் நடிகர் பிரபாஸ் பாகுபலி சீரிஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது மார்க்கெட் இந்திய அளவில் பரவியது மேலும் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களாக இருக்கின்றன காரணம் பிரபாஸ் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை அள்ளும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.
சஹா திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் ராதேஷயாம், ஆதிபுருஷ், சலார் போன்ற பல்வேறு பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக முதலில் பிரபாஸ் நடிப்பில் ராதேஷ்யாம் படம் பொங்கலுக்கு வெளிவர ரெடியாக இருக்கிறது. அதன்பின் ஒவ்வொன்றாக பிரபாஸ் நடித்த திரைப்படங்கள் வெளிவர இருப்பதால் அவரது மார்க்கெட் விண்ணைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகர பிரபாஸின் திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பாகவே அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் அதன்படி மகாநடி படத்தை இயக்கிய நாக அஷ்வின் படத்தில் ஒன்றில் நடித்து வருகிறார் இந்த படம் 400 கோடி பட்ஜெட் படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக இதுவரை இல்லாத ஹிந்தி பட நடிகையுடன் முதன்முதலாக இணைந்து உள்ளார்.
அந்த நடிகை வேறு யாரும் அல்ல நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் இவர்களுடன் சேர்ந்து ஹிந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் ஏற்கனவே ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டு நடிகர் அமிதாப்பச்சன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது அதை தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக தொடங்குகிறது.