சம்பள விஷயத்தில் ரஜினி, விஜயை ஓரம் கட்டிய நடிகர் பிரபாஸ்.! ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு கோடி தெரியுமா.? வியப்பில் தென்னிந்திய சினிமா.

prabhas
prabhas

தெலுங்கு சினிமாவில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து  அசத்தியவர் பிரபாஸ். இப்படி இருந்தாலும் அவரது பேரும் புகழும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் எடுபடவில்லை இப்படி இருந்த நிலையில் ராஜாமௌலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்திற்காக 5 வருடங்களாக கடுமையாக உழைத்தார் படமும் வெளிவந்து எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இரண்டாம் பாகமும் நல்லதொரு வசூலை பெற்றுத் தந்ததால் எப்படி ராஜமௌலியின் பெயரும் உலக அளவில் பரவியது அதுபோல பாகுபலி பிரபாஸின் பெயரும் விண்ணை தொட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் பிரமாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்திற்காக அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது அதில் ஒன்றாக ஒம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதி-புருஷ் திரைப்படத்திற்காக நடிகர் பிரபாஸ் தற்போது சுமார் 150 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது இதனால் தற்போது டாப் நட்சத்திரங்களாக இருக்கும் பாலிவுட் நடிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

நடிகர் அக்ஷய்குமார் தான் இதுவரை ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளம் வாங்கி வந்தார் தற்போது அவரை நடிகர் பிரபாஸ் தொட்டு உள்ளார். ஆதி புரூஷ் திரைப்படம் ஒரு வரலாற்று கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபாஸுடன் கைகோர்த்து சையப் அலிகான் கீர்த்தி சனோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ்  அடுத்தடுத்த பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் சலார்,  ரா தேஷியாம், ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திரைப்படங்கள் வெற்றியடையும் பட்சத்தில் அவரது சம்பளம் இன்னும் அதிகரித்தாலும் அதிகரிக்கலாம்  என்பதே சினிமா பிரபலங்களின் கணிப்பாக இருக்கிறது.