திடீரென 50 கோடியை தயாரிப்பாளருக்கு திருப்பிக் கொடுத்த பிரபாஸ் – என்னடாது தலைவனுக்கு வந்த சோதனை..

prabhas
prabhas

கொரோனா மூன்றாவது அலை சற்று கம்மியாக இருப்பதன் காரணமாக டாப் நடிகர்கள் திரைப்படங்கள் பல்வேறு தடைகளைத் தாண்டி ஒருவழியாக தற்போது திரையரங்கில் வெளிவந்து அசத்துகின்றன. அந்த வகையில் தமிழில் அஜித்தின் வலிமை சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அடுத்ததாக விஜய் கமல் என அடுத்தடுத்த நடிகர்கள் படங்கள் வெளிவர இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் தெலுங்கில் டாப் நடிகரான பிரபாஸின் ராதே ஷ்யாம் படமும் வெளிவந்து அசத்தியது இந்த படம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கை நிபுணராக பிரபாஸ் நடித்து இருந்தார் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.இந்த படத்தின் டிரைலர் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற..

நிலையில் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு இயலாததால் ராதே ஷ்யாம் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதன்பின் பொதுமக்கள் இந்த திரைப்படத்தை பெரிய அளவில் பார்க்க ஆர்வம் காட்டாததால் வசூல் குறைந்து கொண்டே இருக்கிறதாம்.

ஓரளவு போட்ட பணத்தை இந்த படம் எடுத்துக் கொண்டாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை என்பதால் படம் இப்படி இருப்பதை உணர்ந்து கொண்ட பிரபாஸ் தற்போது தான் வாங்கிய சம்பளத்தில் இருந்து 50 கோடியை மீண்டும் தயாரிப்பு நிறுவனத்திடமே கொடுத்து விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திரை உலகில் ஒரு படம் வெற்றி பெறவில்லை என்றால் அந்த படத்தில் நடித்த அவர்களையும் தாண்டி தயாரிப்பாளருக்கு தான் பெரிய பாதிப்பு அதை சரியாக உணர்ந்து கொண்ட பிரபாஸ் தற்போது தனது சம்பளத்திலிருந்து 50 கோடியை திருப்பி கொடுத்தது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.