பிரபாஸ் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்காக கமலஹாசனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது இந்த நிலையில் நான் நடிக்கிறேன் என கமலஹாசன் கூறிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் தீபிகா படுகோனே அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வரும் மெகா பட்ஜெட் திரைப்படமாக உருவாகி வருகிறது ப்ராஜெக்ட் கே இந்த திரைப்படத்தில் கமலஹாசனை நடிக்குமாறு கேட்டுள்ளார் பிரபல இயக்குனர் ஆனால் கமலஹாசன் உடனே பதில் எதுவும் கூறவில்லை வில்லனாக தானே நடிக்கணும் நான் நடிக்கிறேன் என கமலஹாசன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கமலஹாசன் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் நடிப்பதற்காக டேட் ஒதுக்கி விட்டாராம் ஆனால் வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் பெரும் தொகையாக சம்பளமாக கேட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக 20 நாள் ஒதுக்கி கொடுத்துள்ளாராம் கமல் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம் இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் நடிக்க இருப்பதாகவும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க கமலஹாசன் 150 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது ஆனால் இந்த தகவல் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை கமலஹாசன் கதாநாயகனாக நடிக்க 75 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார் ஆனால் 20 நாள் நடிப்பதற்காக மட்டும் 150 கோடி வரை சம்பளமாக கேட்டிருக்க வாய்ப்பே இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அப்படியே 150 கோடி கேட்டிருந்தாலும் அதில் எந்த ஒரு தப்பும் கிடையாது ஏனென்றால் உலக நாயகன் என்ற பெயர் எடுத்தவர் கமலஹாசன் நடிப்பில் மிகுந்த வல்லவர் இந்த நிலையில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் 500 கோடி செலவில் எடுத்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருப்பதால் கடந்த ஐந்து மாதங்களாகவே கிராபிக்ஸ் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அது மட்டும் இல்லாமல் அடுத்த ஆண்டு வரை இந்த கிராபிக்ஸ் பணிகள் தொடரும் எனவும் தயாரிப்பாளர் அஸ்வினி தெரிவித்துள்ளார்.அதேபோல் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தான் கமலஹாசன் நடிக்க வேண்டும் என விரும்பியுள்ளாராம். இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன் தீபிகா படுகோனே ஆகியோர்கள் நடிக்கிறார் கமல்ஹாசனும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மட்டும் அல்லாமல் திரை பிரபலங்களிடமும் அதிகரித்துள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி 12-ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.