நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் தற்போது டாப் நடிகராக வருவதோடு இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களாக இருந்து வருகின்றன. பாகுபலி சீரிஸ் தொடர்ந்து இவர் சஹோ, ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ் போன்ற மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக ஆதிபுருஷ் படம் சுமார் 450 கோடிபொருட் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து சையிப் அலிகான், கீர்த்தி சன்னோன் மற்றும் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை ஒம் ராவத் என்பவர் இயக்குகிறார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க 3டி யில் எடுக்கப்பட்டு வருகிறது.
பாகுபலி படத்தின் கதைக்காக பிரபாஸ் தாறுமாறாக உடலை ஏற்றி நடித்து மிரட்டினார் அதன் பிறகு இவர் நடித்த படத்திற்காக சற்று உடல் எடையை குறைத்து நடித்தார் இப்படி இருக்க ஆதிபுருஷ் படதுகாக மீண்டும் தன்னை பிட்டாக வைத்துக் கொள்ள மீண்டும் உடல் எடையை ஏற்றி நடிக்க உள்ளார்.
இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்துவரும் சன்னி சிங் கூறியது இந்த படத்திற்காக நானும் பிரபாகரனும் உடல் எடையை ஏற்றி தாறுமாறாக மாறயுள்ளோம். ஆனால் இதனை எல்லாம் இயற்கையான முறையில் நானும் பிரபாசும் இணைந்து செய்ய இருக்கிறோம்.
இதை நாங்கள் மருந்துகளையோ அல்லது பொருட்களையோ போட்டு செய்யாமல் இயற்கைக்கு செய்வதற்காக தற்போது தனது வேலைகளை நாங்கள் தொடங்கி உள்ளோம் என கூறினார்.