4 மொழிகளிலும் வெளியாகும் பிரபாஸ் படத்தில் வில்லனாக தமிழ் பட ஹீரோ நடிக்கயுள்ளாரா.? படம் வேற லெவல்.!

prabhas

தமிழ்சினிமாவில் ஆணழகன் என அழைக்கப்படுபவர்கள் வெகுசிலரே அந்த வகையில் முதன்மையானவர் அரவிந்த்சாமி என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கட்ட காலத்தில் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார் இருப்பினும் இடையில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.

இந்த நிலையில் அவர் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் படத்தில் வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் இப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக தமிழ் சினிமாவில் அமைந்தது இதனை தொடர்ந்து அவர் போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தற்போது தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மீண்டும் தொடங்கி உள்ளார்.

இவர் நரகாசுரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இருப்பினும் சில பிரச்சனைகள் காரணமாக இப்படம் வெளிவராமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்தநிலையில் பிரபாஸ் நடிப்பில் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழியிலும் உருவாகும் படத்தில் அரவிந்த்சாமி அவர்கள் வில்லனாக நடிக்க உள்ளார்.

aravind
aravind

என தகவல் வெளியாகி உள்ளது இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கவுள்ளார் இவர்களுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் பிறகு மிகப் பெரிய பட்டாளம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இப்படம் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது தற்பொழுது அரவிந்த்சாமி அவர்கள் தமிழக தொடர்ந்து தற்போது பிற மொழி படங்களில் தனது கவனத்தை செலுத்தி தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டு வருகிறார்.