தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஒருவர் தற்பொழுது 6.5 கோடி மதிப்புள்ள லம்போகினி கார் ஒன்றை வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பாகுபலி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகினர், ரசிகர்கள் என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் பிரபாஸ். இவர் பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார். இருந்தாலும் அவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டு இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.
இவர் ஒரு பேட்டியில் தனது நீண்ட நாள் கனவான லம்போகினி கார் வாங்குவதைப் பற்றி கூறியிருந்தார். இந்தக் கார் பல கோடி மதிப்புடையது. இந்நிலையில் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இவரின் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான சம்பளம் ரூபாய் 150 கோடி வாங்கி வருகிறார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது ராதே ஷ்யாம்,ஆதிபூசன், சலார் போன்ற தெலுங்கு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்த படம் பல கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தனது நீண்ட நாள் கனவான லம்போகினி காரை 6.5 கோடிக்கு பிரபாஸ் வாங்கியுள்ளார். இதனை அறிந்த பலர் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் பேட்டியில் பிரபாஸ் தனது கனவைப் பற்றி கூறியிருந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.
அதுமட்டுமல்லாமல் சில ரசிகர்கள் 150 கோடி சம்பளம் வாங்கும் நடிகருக்கு இது சாதாரண விஷயம் என்று கூறிவருகிறார்கள்.