சினிமாவால் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த பவர் ஸ்டார்..! இவ்வளவு கஷ்டத்துடன் மனுஷன் எப்படி சிரிக்கிறார்ன்னு தெரியலையே..!

power-star-12

நடிப்பு மட்டுமின்றி  தயாரிப்பிலும் அதிக ஆர்வம் கொண்டு வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பவர் ஸ்டார் இவருடைய உண்மையான பெயர் சீனிவாசன்.  இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது அவருடைய வாழ்க்கையில் சில கஷ்டமான விஷயங்களை வெளிக் காட்டி உள்ளார்.

பொதுவாக பவர்ஸ்டார் மக்களை சிரிக்க வைப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் இந்நிலையில் அவரிடம் பேச ஆரம்பித்த பொழுது என்னை கலாய்க்க போகிறீர்களா என்று ஒரு கேள்வி எழுப்பி விட்டார்.  அந்த வகையில் திரையில் மக்களை சிரிக்க வைப்பதற்காகவே கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து வந்த நமது பவர் ஸ்டார் சிரிப்புக்கு பின் பெரிய கஷ்டங்கள் இருக்கிறது.

அந்த வகையில் பவர்ஸ்டார் சினிமாவில் முதன் முதலாக தயாரிப்பாளராக களம் இறங்கினார் இதன் மூலமாக பல்வேறு ஏமாற்றங்களையும் சந்தித்தார். அந்தவகையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்திற்கு முன்பாக லத்திகா  போன்ற பல்வேறு திரைப்படங்களை இவர் தயாரித்து கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளார்.

அந்தவகையில் நடிகர் சந்தானம் பவர் ஸ்டார் இடம் நேரடியாக வந்து இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக கேட்டது மட்டுமில்லாமல் இந்த கதாபாத்திரம் உங்களை பெருமளவிற்கு ரீச் செய்யும் என்று கூறினார்.  அந்த வகையில் இவர் சினிமாவில் எண்ட்ரி ஆன உடன் பலரால் தெரியாமலே ஏமாந்து விட்டார்.

அதன்பிறகு தனக்கு பின்னால் நடக்கும் ஏமாற்றங்களை தெரிந்து கொண்ட பவர்ஸ்டார் அதற்கு தகுந்தாற்போல் நடக்க ஆரம்பித்துவிட்டார். இதன் மூலமாக எனக்கு பாடம் கற்றுக்கொண்டது எல்லாம் போதும் இதற்கு மேல் நான் தயாரிப்பில் இறங்குவதும் இல்லை அந்தப் பேச்சுக்கு இடமும் இல்லை என்று கூறி விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் தான் இதுபோன்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை மகிழ்விப்பது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியது மட்டுமல்லாமல் என்னுடைய பாதையை நான் சரியாக பயணிக்க தற்போது கற்றுக் கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.

power star-11
power star-11