தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரேஷ்மா. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து அவருக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன.
ரேஷ்மா அவர்கள் இதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலில் தான் முதலில் நடித்து வந்தார். இதனையடுத்து அவர் வாணி ராணி உட்பட பல சீரியல்களில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தான் தனது பணியை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அவர் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். சமுகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அவர்கள் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ரேஷ்மா அவர்கள் சமூக வலைத்தளத்தில் தனது கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் பதிவு ஒன்றை அதில் அவர் கூறியது பணிவுடன் நடந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் வாழ்க்கை உங்களை பணிவுடன் நடக்க வைத்துவிடும் என ரசிகர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை போட்டு இப்படித்தான் கூற வேண்டுமா என அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.