Vijay Antony – Vijay: விஜய் ஆண்டனியின் மகள் மீரா மரணம் அடைந்த செய்தி தெரிந்தவுடன் விஜய் எடுத்த முடிவு குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய இவர் தனது தனித்துவமான கதை, திரைக்கதை போன்றவற்றை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பொதுவாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்றும் ரசிகர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அமையும் படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் பேட்டி ஒன்றில் கூட பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்யாமல் தடுப்பதற்கு வழி அவர்களை சுதந்திரமாக விட வேண்டும் படி படி என்று சொல்லக்கூடாது இதற்கெல்லாம் பெற்றோர்கள் தான் பொறுப்பு என்று கூறியிருந்தார். ஆனால் இந்த சூழ்நிலையில் 16 வயதில் 12 ஆம் வகுப்பு படிக்கும் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை 3 மணி அளவில் தனது அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த துயர சம்பவம் சினிமா பிரபலங்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே ஏராளமான திரைப் பிரபலங்கள் விஜய் ஆண்டனியை போனின் மூலம் தொடர்பு கொண்டு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் போஸ்டர் இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி சார் ஆழ்ந்த அனுதாபங்கள் எங்களுடைய பிரார்த்தனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இருக்கும் இந்த மாதிரியான சூழ்நிலையால் லியோ படத்தின் போஸ்டரை நாளை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளது.