முதலில் விசாரிங்க அப்புறம் செய்தி போடுங்க நயன்தாரா ஆவேசம்.!

nayanthara

வெள்ளித்திரையில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தவர் தான் நயன்தாரா இவர் அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார்.

தற்போது இவர் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இந்நிலையில் சமீபத்தில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் அந்த திரைப்படம் OTTயில் வெளியானாலும் அந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.

இதனையடுத்து நயன்தாரா தற்பொழுது ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த பட சூட்டிங்கில் ஒருசில நபருக்கு கொரோனா தோற்று பாதிக்கப்பட்டதால் படம் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் நயன்தாரா வேலுநாச்சியாரின் கதையில் நடிக்கப்போவதாக ஒரு சில நாட்கள் முன்பு தகவல் இணையதளத்தில் வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.

ஆனால் அது உண்மையில்லையாம் இதைதொடர்ந்து எந்த செய்தியாக இருந்தாலும் ஒழுங்காக விசாரித்து போடுங்கள் என்று நயன்தாராவின் தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது இந்த தகவல் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

nayanthara
nayanthara