சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் மாநாடு திரைப்படம் தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் திரையில் வெளியேறுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது
மேலும் மாநாடு திரைப்படமானது தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியிடப்போவதாக படக்குழுவினர்கள் முடிவு செய்தது மட்டுமின்றி அதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். அந்த வகையில் அரசு தற்சமயம் அறிவித்த அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
இவ்வாறு வெளிவந்த அறிக்கையானது மாநாடு தயாரிப்பாளரை மிகுந்த மனவருத்தத்தை கொடுத்துள்ளனர் அந்த வகையில் தற்போது தடுப்பூசி போட்டு இருந்தாலே இனி தியேட்டரில் அனுமதி என்று ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார்கள்.
அந்தவகையில் ஆத்திரமடைந்த நமது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உலகிலே இதுபோன்ற கொடுமைகள் நடப்பது இங்கு மட்டும்தான் அந்தவகையில் அவரவருடைய சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஆகையால் தியேட்டரில் முன்பை போல மக்கள் அனைவருமே அனுமதிக்க வேண்டும் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து வருகிறார். பொதுவாக நமது தமிழகத்தில் பல்வேறு மக்கள்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் சிலர் தரப்பு மக்கள் அதனை போடுவதற்கு தயங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் மாநாடு திரைப்படம் வெளியாகும் நிலையில் இப்படி ஒரு அறிக்கை தமிழ்நாடு அரசு வெளியிட்டது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.