பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த பிரபலம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

PANDIYAN-STORES-12
PANDIYAN-STORES-12PANDIYAN-STORES-12

பொதுவாக சினிமாவை பொருத்தவரை நடிகைகளை மட்டமாக நடத்துவது வழக்கம். அதோட மட்டுமல்லாமல் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு செல்லும் பொழுது அவர்களிடம் பலரும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்க வேண்டும் என்பதை கேட்பது வழக்கமாக இருந்து வருகிறது. இது இப்பொழுது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் இருந்தே இருந்து வருகிறது என்பதுதான் உண்மை.

இதன் காரணமாக பலருடைய கனவு நாசமாகிறது ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய தைரியத்தினால் சினிமாவில் பிரபலமடைந்துள்ளார்கள். உதாரணமாக நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பல நடிகைகளை கூறலாம். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை தன்னை அட்ஜஸ்ட்மென்ட் அழைத்ததாக சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் இந்த சீரியல் இந்த அளவிற்கு பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் முல்லை கதாபாத்திரம்தான்.

முதலில் இந்த கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார் பிறகு இவர் இறந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் அறிவு மணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவிய அறிமுகமானார். தற்பொழுது இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதால் இவரும் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது முல்லை கதாபாத்திரத்தில் லாவண்யா என்ற நடிகை நடித்து வருகிறார் இவர் சிற்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த சீரியல் திடீரென முடிந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமீப பேட்டி ஒன்றில் நான் சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவு செய்யும் பொழுது வாய்ப்புக்காக காத்திருந்தேன் அப்பொழுது ஒருவர் தன்னுடன் ஆறு மாதம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கொண்டு நம்ம எங்கேயாவது போயிட்டு வரலாம் என கேட்டார் அப்படி செய்தால் உன்னை புகழின் உச்சத்திற்கு செல்வதாகவும் கூறி ஆசை வார்த்தை பேசினாராம்.

ஆனால் லாவண்யா இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டாராம். மேலும் அவர் கூறியதாவது தற்பொழுது சினிமாவில் பிரபலம் அடைந்துள்ள பலரும் இதுபோல் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு தான் பிரபலம் அடைந்து இருக்கிறார்கள் ஆனால் அதுபோன்ற என்னால் செய்ய முடியாது என கூறியுள்ளார்.