பொதுவாக சினிமாவை பொருத்தவரை ஒரு படத்தில் ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருந்து வருகிறதோ அதேபோல் வில்லன் கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் இருந்து வருகிறது ஒருவர் ஹீரோவாகிறார் என்றால் அதற்கு அந்த வில்லன் தான் காரணம் இப்படிப்பட்ட நிலையில் முன்பை விட சமீப காலங்களாக வில்லன் நடிகர்களை ரசிகர்கள் ரசிகத் தொடங்கி விட்டனர்.
இப்படிப்பட்ட நிலையில் பிரபல நடிகர் ராகுல் தேவ் சமீப பேட்டியில் பெரும் சர்ச்சைக்குரிய விஷயத்தை கூறியிருக்கும் நிலையில் அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர்களும் தங்களுடைய படங்கள் சூப்பர் ஹிட் பெற வேண்டும் என்பதற்காக ஹீரோக்களுக்கு நிகராக வில்லன் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் பல வில்லன் நடிகர்கள் சமீப காலங்களாக சினிமாவில் நடித்து வரும் நிலையில் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முக்கிய வில்லன்களில் ஒருவராக இருந்த வருபவர் தான் நடிகர் ராகுல் தேவ். இவர் கேப்டன் விஜயகாந்த் உடன் இணைந்து நரசிம்மா, ராகவா லாரன்ஸின் முனி, நடிகர் அஜித்தின் வேதாளம் போன்ற பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து கலக்கியுள்ளார்.
மேலும் கடைசியாக இவர் லெஜண்ட் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் நடிகர் ராகுல் தேவ் நான் நன்றாக படித்த குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன் தென்னிந்திய சினிமாவின் படங்களில் நடிக்கும் போது என்னுடைய மூளை மற்றும் புத்திசாலித்தனத்தை வீட்டில் வைத்துவிட்டு தான் வந்து நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் தென்னிந்திய சினிமாவில் இன்னும் பழைய டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர் எனவும் இரண்டு பேர் சண்டையிடும் பொழுது யாராவது சட்டையை கழட்டி தங்களுடைய உடம்பை காட்டுவார்கள் இதுதான் தென்னிந்திய சினிமாவில் நடக்கிறது படத்தின் வணிகத்திற்கு இவ்வாறு செய்வார்கள் யாருடைய படைப்பாற்றலையும் நாம் குறை சொல்ல முடியாது என கூறியுள்ளார். மேலும் ஜிம் பாடியான என்னை வடிவே இல்லாத ஹீரோ அடிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் அதை சகித்து தான் நடித்தாக வேண்டும் எனவும் கூறியுள்ளார். இவ்வாறு இவர் கூறியிருப்பதை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.