கமலுக்கு அடுத்த அடுத்த பட வாய்ப்பு வருவதால் ரத்த கண்ணீர் வடிக்கும் பிரபல டிவி சேனல்.? காரணம் இதுதான்.

kamal

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விஜய் டிவி தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ சீரியல் என பலவற்றை தொகுத்து வழங்கி தனது டிஆர்பி ரேட்டை அதிகரித்து கொண்டதோடு மட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.

இப்படி இருந்தாலும் சமீபகாலமாக விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டை அதிகரித்துக்கொண்டதற்கு முக்கிய காரணம் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்  சீசன் தான். கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் நான்காவதாக மீண்டும் கமலை வைத்து தொகுப்பாளராக இயக்க முடிவு செய்தது.

kamal
kamal

ஆனால் தற்பொழுது கமலஹாசனும் இந்தியன்-2, தலைவன் இருக்கிறான் போன்ற படங்களில் கமிட் ஆகியுள்ளார் மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒரு படத்திலும் கமிட் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில் விஜய் டிவி நிர்வாகம் கமலஹாசன் பிக் பாஸ் சீசன் 4 யை தொகுத்து வழங்குவாரா  என்பது பெரிய அச்சத்தில் இருந்து வருகிறது இந்த நிலையில் கோடம்பாக்க வட்டாரங்கள் கமல் பிக் பாஸ் சீசன் இல் கலந்து கொள்வதே மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கும் என தெரிவித்து வருகின்றனர்.

kamal

ஆனால் கமலஹாசன் அவர்களோ இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 25 கோடியை பேசி  அட்வான்ஸ் வாங்கியுள்ளார். இருப்பினும் மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கமலஹாசன்  இந்த நிகழ்ச்சிக்கு நிச்சயம் வந்துவிடுவார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.