பிரபல டிவியில் ஒளிப்பரப்பாகும் – சிவகார்த்திகேயனின் “டாக்டர் ” திரைப்படம்.! எந்த தொலைகாட்சி.? எந்த தேதியில் தெரியுமா.?

sivakarthikeyan
sivakarthikeyan

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் காமெடி கலந்த திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் இவர் ஆக்சன் திரைப்படங்களை தேர்ந்தெடுத்தார். அதுவும் அவருக்கு வெற்றி தோல்வியை கொடுத்தது.

இந்த நிலையில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நெல்சன் திலிப் குமார் உடன் இணைந்து டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கும் என ரசிகர்கள் நம்பினார் மேலும் டிரைலர் கூட அப்படித்தான் இருந்தது.

ஆனால் படத்தை பார்த்தால் அதற்கு எதிர்மாறாக இருந்தது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக உருவாகி இருந்தது இருப்பினும் படமும் மக்களை மகிழ்வித்து வருவதால் தற்போது இதற்காக நல்ல விமர்சனமே கிடைக்கின்றன. மேலும் டாக்டர் திரைப்படம் வசூல் வேட்டையும் சிறப்பாக நடத்தி வருகிறது.

முதல் நாளில் சுமார் 6 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது மூன்று நாள்களில் மட்டும் இந்த திரைப்படம் 15 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தி பிளாக் பஸ்டர் படமாக மாறும் என பலரும் கூறி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப் போவதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் டிவியில் ஒலியாக இருக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ்- லும் இந்த திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.