மாவீரன் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி.? குஷியில் ரசிகர்கள்

maveeran
maveeran

சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் காமெடியனாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பிரபலமடைந்தவர் சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் இவரது திறமையை சினிமா பிரபலங்களே புகழ்ந்து பேசிய நிலையில் திடீரென மெரினா படத்தில் நடித்து தன்னை சினிமா உலகில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே என தொடர்ந்து காமெடி கலந்த படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களையும் உருவாக்கினார் இப்படி ஓடிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன்..

கடைசியாக நடித்த டான், டாக்டர் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதால் முன்னணி நடிகர் என்ற பட்டத்தையும் பெற்றார். அதன் பிறகு அவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது இதிலிருந்து மீண்டு வர மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

அவருடன் இணைந்து மிஸ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு சரிதா சுனில் monisha blessy மற்றும் பலர் நடித்துள்ளனர் படம் வருகின்ற ஜூலை 14 ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மாவீரன் திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது மாவீரன் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான சன் டிவி கைப்பற்றி இருக்கிறதாம்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் காரணம் சன் பிக்சர்ஸ் இடம் ஒரு படம் போய்விட்டால் அந்த படத்தின் ப்ரோமோஷன் வேற லெவலில் இருப்பதோடு நிச்சயம் ஹிட் அடிக்கும் என கூறி நம்பிக்கையில் இருக்கின்றனர். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.