உலக நாயகன் கமலஹாசனும், பிரபல பாடகியும் “ரகசிய உறவில்” இருந்தார்கள் – பிரபல பத்திரிகையாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்

kamal
kamal

தமிழ் திரை உலகில் நடிப்பிற்கு பெயர் போனவர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கின்றனர் அந்த வகையில் சிவாஜியை தொடர்ந்து திரை உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர்  உலகநாயகன் கமலஹாசன். வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார் தற்பொழுது கூட இவர் திரையுலகில் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார்.

கடைசியாக இவர் நடித்த விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் கூட்டணி அமைத்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு ஹச். வினோத் உடன் ஒரு பிரம்மாண்ட படம்..

அடுத்ததாக மணிரத்தினத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் பண்ண உலகநாயகன் முடிவெடுத்துள்ளார். இதனால்  அடுத்த மூன்று வருடங்களுக்கு உலகநாயகன் கமலஹாசன் படும் பிஸியாக உள்ளார். இப்படி திரை உலகில் ஜொலிக்கும் உலக நாயகன் கமலஹாசன் அவ்வபொழுது தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்படுவது வழக்கம்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து பல தெரியாத விஷயங்களை கூட வெளிப்படையாக போட்டு உடைத்து வருகிறார் தற்பொழுது உலகநாயகன் கமலஹாசனை பற்றி அவர் சொல்லி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயில்வான் ரங்கநாதன் சொல்லி உள்ளது என்னவென்றால்..

பாடகி மற்றும் பிரபல நடிகையுமான ஆண்ட்ரியா உடன் கமலஹாசன் ரகசிய உறவில் இருந்தார்கள் என கூறினார். அதனால் தான் கமலஹாசனின் படமான விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் நடிக்க வைத்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறி உள்ளார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.