தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு இவர் தனக்கு வயதான பிறகும் தொடர்ந்து ஹீரோக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இதன் காரணமாக சமீப காலங்களாக ரசிகர்கள் இவருக்கு வயதான காரணத்தினால் இவரின் திரைப்படத்தில் பெரிதாக சுறுசுறுப்பு இல்லை என கூறி வருகிறார்கள்.
இதன் காரணமாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் டிபி மாற்றியிருந்தார் இதன் காரணமாக பிரபல மருத்துவர் நடிகை பக்கத்தில் கிண்டல் அடித்த உள்ளார் இது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து பிரபலங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரும் வாட்ஸ் அப், டுவிட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக வலைதளத்தில் தங்களுடைய கணக்குகளின் முகப்பு படங்களை தேசியக்கொடியாக வைத்து வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் மோடியிடம் ரஜினி கட்சிக் கொடிக்கு பதிலாக இல்லாதோறு தேசியக்கொடி என்ற திட்டத்தை பற்றி முன்னரே பேசி இருந்தார்.
அதைப் பற்றிய பிரதமரும் பரிசளித்து வருகிறார் என்ற தகவல் வெளியானது மேலும் இரண்டு தினங்களுக்கு முன்பு ஆளுநரையும் சந்தித்தார் எனவே எதற்காக ஆளுநரை சந்தித்தீர்கள் என்று கேட்கப்பட்டு வந்த நிலையில் எதைப்பற்றியும் சொல்ல முடியாது என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.மேலும் தேசியக் கொடியை பற்றி ரஜினி இன்னும் அவர் முகப்பு படத்தை மாற்றவில்லை என்ற கருத்து பரவி வந்தது.
ஆனால் இன்று அவர் முகப்பு படத்தை தேசியக் கொடியாக மாற்றி இருக்கிறார் அதுவும் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் சீரியல் நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அது ரொம்ப முக்கியம் என பதில் அளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இதுதான் தற்பொழுது ட்ரெண்டிங்காகி வருகிறது.