பல கோடி கொடுத்து “பொன்னியின் செல்வன்” படத்தை வாங்கிய பிரபல OTT தளம்.! சைலண்டாக நடந்த வியாபாரம்.

ponniyin-selvan-
ponniyin-selvan-

சினிமாவுலகில் காமெடி ஆக்ஷன் திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் நாவல் மற்றும் உண்மை கதைகளை மையமாக வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டு வருபவர்கள் வெகு சிலரே அந்த இயக்குனர்களும் உச்ச நட்சத்திரமாக தான் ஜொலிக்கின்றனர். அந்த வகையில் என்பது காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு நாவல் மற்றும் உண்மை.

கதையை மையமாக வைத்து படங்களை இயக்கி வெற்றி கொண்டு வருபவர் மணிரத்தினம் இப்பொழுது இவர் பல நடிகர் நடிகைகளை வைத்து பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தையும் எடுக்க இருக்கிறார் என்ற தகவலும் அதிரடியாக வெளிவருகின்றன. முதல் பாகத்தில் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், திரிஷா மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய ஒரு தொகை கொடுத்து அமேசான் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

அமேசான் ப்ரைம் நிறுவனம் post theatrical streaming உரிமத்தை சுமார் 125 கோடி கொடுத்து கைப்பற்றி உள்ளதாம். மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழ்நாட்டையும் தாண்டி மிகப்பெரிய அளவில் இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருப்பதால் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.