சிம்புவின் “பத்து தல” படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றிய பிரபல OTT தளம்.!

simbu-
simbu-

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது தனது திரைப்படத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு ஹீரோவாக தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தார் இருப்பினும் ஒரு கட்டத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வி படங்களாக போக ரொம்ப மன உளைச்சலில் இருந்தார்.

இதனால் சரியாக படங்களில் நடிக்கவில்லை மேலும் உடல் எடையும் அதிகரித்து ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார் இதனால் பட வாய்ப்புகளும் ஒன்னு ரெண்டு வந்ததும் கிடைக்காமல் போனது இதிலிருந்து மீண்டும் கம்பேக் கொடுக்க அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து எண்ணங்களை மாற்றி..

தற்போது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருகிறது அதில் முதலாவதாக சிம்பு நடித்து வரும் திரைப்படம் தான் பத்து தல.

இந்த படத்தை ரசிகர்கள் மற்றும் மக்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் இந்த படத்தின் இறுதி கட்டப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தில் சிம்பு ஜோடியாக பிரிய பவானி சங்கர் நடிக்கிறார் வில்லனாக கௌதம் கார்த்திக் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மற்றும் பல நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் பத்து தல படம் குறித்து ஒரு சூப்பர் தகவல் வெளிவந்துள்ளது அதாவது இந்த திரைப்படதை அமேசான் ஓடிடி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறதாம் அதுவும் 26 கோடி கொடுத்து இந்த திரைப்படத்தை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படக்குருவும் சரி, நடிகர் சிம்புவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றன ராம்.