ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் ஜீத்து ஜோசப் என்ற மலையாள இயக்குனர் இயக்கிய திரிஷ்யம் படத்தை தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்து வெற்றி பெற்று வருகிறது இத்திரைப்படம்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்தது இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் கௌதமி உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தார்கள்.
எனவே சில மாதங்களாக தமிழிலும் பாபநாசம் 2 திரைப்படம் வெளி வருவதற்காக படக்குழுவினர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இத்திரைப்படத்தின் முதல் பாகம் தமிழில் எடுக்கும்பொழுது கௌதமி மற்றும் கமலஹாசனின் இருவரும் நடித்து இருந்தார்கள்.
ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டதால் பாபநாசம் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கௌதமி கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பம் படக்குழுவினர் மத்தியில் இருந்து வருகிறது. மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மீனா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததால் தமிழிலும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மீனாவை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
ஆனால் தற்பொழுது மீனா நடிக்க முடியாது என்று கூறியதால் நடிகை நதியா கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் இதற்க்கு நதியாவுக்கு ஓகே சொல்லிவிட்டால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.
நதியா இத்திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் கமலஹாசன் மற்றும் நதியா இருவருக்கிடையே பொருத்தம் மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். தற்பொழுது கமலஹாசன் தடித்து இருந்த இந்தியன் 2 திரைப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து உள்ளது. இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.