தமிழ் சினிமாவில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை கண்ட படம் தான் லவ் டுடே ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியிருந்த படம் தான் லவ் டுடே. மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவான இந்த படம் 90 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை பெற்றது.
எனவே இந்த படத்தின் தயாரிப்பாளரும் லாபமடைந்த நிலையில் இந்த படத்திற்குப் பிறகு தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்த படங்களில் இயக்குவதற்கும், நடிப்பதற்கும் ஒப்பந்தமாகி வருகிறார். மேலும் ஏராளமான முன்னணி நடிகர்களும் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஆர்வம் காமித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து இவனா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களை இணைந்து நடித்தது இருந்தார்கள். இவ்வாறு தமிழ் சினிமாவில் மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி இந்த அளவிற்கு வெற்றி சாதனையை படைத்திருக்கும் முதல் திரைப்படமாக லவ் டுடே படம் இருந்து வருகிறது.
இவ்வாறு மேலும் தமிழில் சூப்பர் ஹிட்டான இந்த படம் தெலுங்கிலும் வெளியாகிய மெகா ஹிட்டான நிலையில் தற்போது இந்த படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தெலுங்கு ரீமேக்கில் யார்? யார்? நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது அந்த வகையில் ஹிந்தியில் ரீமேக் ஆகும் லவ் டுடே படத்தில் ஹீரோவாக அமீர்கான் மகன் நடிக்க இருக்கிறாராம்.
மேலும் இவரை தொடர்ந்து ஹீரோயினாக இவனா நடித்த கதாபாத்திரத்தில் ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூர் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.