அஜித் நடிப்பில் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, புகழ் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி உள்ளனர்.
வலிமை திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன்,சென்டிமெண்ட் நிறைந்த திரைப்படம் சொல்லப்போனால் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இந்த படத்தில் சண்டைக் காட்சிகளில் இருக்கும் என்பதால் வேற லெவலில் ரசிகர்கள் எதிர்நோக்கி படத்தை பார்க்க காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களது நினைவு கிட்டதட்ட நிறைவேறி உள்ளது ஏனென்றால் வலிமை படம் பல்வேறு தடைகளைத் தாண்டி ரிலீஸ் அழகாய் இருந்தது திடீரென அதில் இருந்து பின்வாங்கி விதிகளை மாற்றி கொண்டே போன நிலையில் கடைசியாக வருகின்ற பிப்ரவரி 24ம் தேதியை கன்ஃபார்ம் ஆகிவிட்டது டிக்கெட் புக்கிங் கூட முடிந்து வருகிறது.
இதனால் ரசிகர்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களிலேயே அஜித்தை திரையரங்கில் பார்த்து கொண்டாட இருக்கின்றனர். ஒருபக்கம் இது இப்படி இருக்க மறுபக்கம் ஒரு அதிர்ச்சியான தகவலும் கிடைத்துள்ளது அதாவது அஜித் திரைப்படங்கள் திரையரங்கை தாண்டி ஒரு கட்டத்தில் பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப படுவது வழக்கம்.
அந்த வகையில் அஜீத் படத்தை போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சேனல்கள் வாங்கியுள்ளன அந்த வகையில் ஜீ தமிழ் சன் டிவி போன்ற பல தொலைக்காட்சி நிறுவனங்கள் அஜித் படத்தை வெளியிட்டு டிஆர்பி நல்ல இடத்தைப் பெற்றுள்ளன.
இப்படி இருக்கின்ற நிலையில் ஒரே ஒரு தொலைக்காட்சி மட்டும் இதுவரை அஜித் படத்தை வாங்கியதே கிடையாதாம் . அந்த நிறுவனம் வேறு எதுவும் அல்ல விஜய் டிவி தொலைக்காட்சி தானாம். இந்த தொலைக்காட்சி இதுவரை அஜீத் படத்தை வெளியிட்டது கிடையாது.