அஜித்துடன் நடிப்பதற்காக மிகப்பெரிய திரைப்படத்தை நிராகரித்த பிரபல நடிகை.!

ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு பல நடிகைகள் ஆசைப்படுவார்கள் அதிலும் இளநடிகைகள் முன்னணி நடிகர்களுடன் எப்படியாவது நடித்த விட வேண்டும் என குறிக்கோளுடன் இருப்பார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு இளம் நடிகைகள் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த நிலையில் அஜித் திரைப்படத்தில் நடிப்பதற்காக மிகப்பெரிய பட வாய்ப்பை தூக்கி எறிந்து விட்டு வந்துள்ளார் நடிகை மஞ்சு வாரியார். நடிகை மஞ்சு வாரியார் தற்போது அஜித்தின் 61வது திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்தை எச் வினோத் அவர்கள் தான் இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அஜித் அடிக்கடி வெளியே சென்றுள்ள காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடைய வைரலாகி வந்தது. இந்த நிலையில்  மஞ்சு வாரியர்  அஜித் திரைப்படத்தில் நடிப்பதற்காக மிகப்பெரிய திரைப்படத்தின் வாய்ப்பை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் பிருத்திவிராஜன் காப்பா படத்திலிருந்து தான் மஞ்சு வாரியர் வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது ஏனென்றால் இரண்டு திரைப்படங்களிலும் நடிப்பதற்கு தேதிகள் ஒத்து வராததாலும் அப்படி தேதி ஒதுக்குவதில் மிகப்பெரிய பிரச்சனை இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது  kaapa திரைப்படத்தில் அபர்ணா பால முரளி  மஞ்சு வாரியருக்கு பதிலாக நடித்து வருகிறார்.

அபர்ணா பால முரளி சூராவை போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித் சமீபத்தில் ஏர்போர்ட் வந்துள்ளார் அப்பொழுது எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் படும் வேகமாக வைரலாகி வந்தது. அந்தப் புகைப்படத்தில் அஜித் மிகவும்  அம்சமாக இருக்கிறார்.

manju warrier
manju warrier