சிறு வயதிலிருந்தே நடித்து வரும் அந்த நடிகர் இப்போது தொட முடியாத உயரத்தில் தனக்கான அந்தஸ்துடன் இருக்கிறார். நடிப்பின் மீது தீராத காதல் கொண்ட நடிகருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது தான் நடிக்கும் படங்களில் ஹீரோயின் உடன் நெருக்கமான காட்சிகள் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்ப்பார்.
அதிலும் ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்றும் நினைப்பார். இதனால் நடிகைகளின் பாடுதான் திண்டாட்டமாக இருக்கும். சில குடும்ப குத்து விளக்குகள் இந்த நடிகரின் பெயரை கேட்டாலே அய்யோ ஆளை விடு சாமி என எஸ்கேப் ஆகி விடுவார்கள்.
அந்த அளவுக்கு ஹீரோ நடிகைகளை படாத பாடு படுத்தி விடுவாராம். அப்படித்தான் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த அக்கா தங்கை நடிகைகள் இவரால் நொந்து போயிருக்கிறார்கள். இதில் அக்கா நடிகை நடிகருடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.
ரொம்பவும் தைரியசாலியான அவரே இந்த நடிகருடன் நடிப்பதற்கு பயப்படுவாராம். அந்த அளவுக்கு நெருக்கமாக நடிக்கிறேன் என சில காட்சிகளில் அதிக உரிமை எடுத்துக் கொள்வாராம்.. இது நடிகைக்கு பிடிக்காததால் நடிகரிடம் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்.
இதனால் கடுப்பான ஹீரோ அவரை கண்டபடி திட்டுவாராம். இதே போல் தான் தங்கை நடிகையுடன் நடிக்கும் போதும் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. ஆனால் வாயில்லா பூச்சி ஆன அந்த நடிகை படத்தை நடித்துக் கொடுத்துவிட்டு இனிமேல் இவர் படத்தில் கமிட்டாக கூடாது என ஒதுங்கி இருக்கிறார்.
இப்படி நடிகர் பற்றி பல சம்பவங்களை சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனாலும் அந்த ஹீரோ இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவது கிடையாது. இப்போதும் கூட இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.