விஜய் படத்தை உதறி தள்ளும் பிரபல நடிகை..! உங்களுக்கு என்னம்மா கூடவே ஒரு பெரிய ஸ்டார் இருக்காரு

Vijay
Vijay

Jothika miss thalapathy 68 : திரை உலகில் முன்னணி நடிகராக வரும் விஜய். லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள தளபதி 68 படத்தில் அடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க  டைம் டிராவல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது அதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.  அக்டோபர் 1ஆம் தேதி படத்தின் பூஜை தொடங்கி அடுத்த நாள் சூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.

தளபதி 68 படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் சென்னையில் நடக்கும் என்றும் பாடல்களுக்காக மட்டுமே தளபதி 68 டீம் வெளிநாடுகளுக்கு செல்லும் என கூறப்படுகிறது. இந்த படத்தை வெங்கட் பிரபு தனது வழக்கமான ஸ்டைலில் தான் எடுக்க இருக்கிறார் இதில் விஜய் தலையிட போடுவதில்லை எனவும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

விஜயின் படத்தில் நடிக்க பல நடிகர் நடிகைகள் காத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் விஜய் படத்திலிருந்து ஒரு நடிகை வெளியேறி உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது அந்த நடிகை வேறு யாரும் அல்ல ஜோதிகா தான் தளபதி 68 படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க ஜோதிகாவை தொடர்பு கொண்ட போது அவருக்கு ஜோடியாக நடித்து விட்டேன்.

இப்பொழுது அவருக்கு அம்மாவா நடிக்க முடியாது எனக்கூறி தளபதி 68 படத்தில் இருந்து விலகினார் அவருக்கு பதிலாக சினேகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இதேபோல ஜோதிகா விஜயின் மற்றொரு படத்தை வேண்டாம் என உதறி தள்ளினார் அந்த படம் வேறு எதுவும் அல்ல அட்லீ இயக்கத்தில் உருவான மெர்சல் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் ஜோதிகாவை தான் முதலில் கேட்டிருந்தார்கள்.

அந்த கதாபாத்திரத்தில் கர்ப்பமாக நடிக்க வேண்டும் என சொல்லியதால் அந்த படத்தை வேண்டாம் என ஒதுக்கி விட்டாராம். இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தளபதி வாய்ப்பு போன என்ன  சூர்யா இருக்காரு உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல நீங்க நினைச்சா அவரு கூட எப்ப வேணாலும் நடிக்கலாம் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.