விஜய் டிவி சீரியல் முடிந்த நிலையில் ஜீ தமிழுக்கு தாவிய பிரபல நடிகை.! வைரலாகும் தகவல்..

vijay tv

பொதுவாக ஒரு சில நடிகைகள் மட்டுமே ஒரே தொலைக்காட்சியில் தொடர்ந்து பணியாற்றி வருவார்கள். ஆனால் ஏராளமான நடிகைகள் எந்த தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தாலும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர்களும் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் கதாநாயகி கேரக்டராக இருந்தாலும், வில்லி கேரக்டராக இருந்தாலும் நடிப்பில் பின்னி எடுப்பவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ். பல ஆண்டு காலங்களாக தொடர்ந்து சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் வில்லி கேரக்டரில் ஏராளமான சீரியல்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திவுள்ளார்.

மேலும் சில ரியால் ஷோக்களிலும் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார் அந்த வகையில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் யுவராஜுவுடன் இணைந்து பங்கு பெற்றார். யுவராஜ் டான்ஸ் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது இதன் மூலம் அவரிடம் இருந்து டான்ஸ் கற்றுக் கொண்ட காயத்ரி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் டான்ஸ் ஆடும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சொல்லப்போனால் திருமணத்திற்கு பிறகு தான் காயத்ரிக்கு நல்ல ரீச் கிடைத்தது. இந்நிலையில் இவர் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அண்ணனுக்கு தங்கையாக இரண்டு தங்கைகளுக்கு மூத்த அக்கா ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இதேபோன்று ஜீ தமிழில் சமீபத்தில் அறிமுகமான முக்கிய சீரியலில் இரண்டு தங்கைகளுக்கு அக்காவாக நடித்துள்ளார். அந்த சீரியல் தான் மீனாட்சி பொண்ணுங்க இதில் ஆரியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த ‘ ரத்தமா குத்துரு’ ரீமேக்காகும்.

kayathri
kayathri

இந்த சீரியல் தெலுங்கில் பயங்கர ஹிட்டான நிலையில் தமிழிலும் அறிமுகப்படுத்தி உள்ளார்கள் முழுக்க முழுக்க இந்த சீரியல் மகள் செண்டிமடை வைத்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் இவர்களை தொடர்ந்து அர்ச்சனாவும் நடித்து வருகிறார். அர்ச்சனாவிற்கு மூன்று மகள்கள் இருக்கும் நிலையில் அதில் மூத்த மகளாக காயத்ரி நடிக்கிறார்.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் போலவே இந்த சீரியலும் ஹிட் அடிக்கும் என காயத்ரி நம்பிக்கையாக கூறி வருகிறார். சமீபத்தில் இந்த சீரியலினை பற்றிய ப்ரோமோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.