Popular actress sona disappoints in love Open talk in frustration :நடிகை சோனா இவர் 2002 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றார். இவர் தயாரிப்பாளர், நடிகை, தொழிலதிபர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் 2001ஆம் ஆண்டு தமிழில் பூவெல்லாம் உன் வாசம், ஷாஜகான் போன்ற திரைப்படங்கள் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் சிவப்பதிகாரம், மிருகம், குசேலன், ஜித்தன் 2, யாமிருக்க பயமேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. இவர் 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரை உலகில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் நல்ல துணிச்சலுடன் இருக்கும் இவர் இன்னும் திருமணம் செய்யாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று இவரிடம் கேட்டதற்கு தனக்கு இரண்டு முறை காதல் வந்ததாகவும் அந்த இரண்டு காதலும் தோல்வியடைந்ததால் திருமணத்தில் ஆர்வம் இல்லை என கூறியுள்ளார்.
இருவரையும் குறைந்தது ஏழு வருடங்களுக்கு மேல் காதலித்து உள்ளாராம். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று நம்பியிருந்த நிலையில் இருவருமே கைவிட்டுவிட்டனராம். இதனால் அவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையாம். அதுமட்டுமல்லாமல் அவரின் நண்பர்கள் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் இவர் அதற்கு மறுத்துவிட்டார்.
நடிகை சோனா கூறுகையில் தனக்கு இரண்டு தங்கைகள் உள்ளார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு. பிறகு தான் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க போவதாகவும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் சுயசரிதையாக எழுதியுளளதாகவும் அதனை வெளியிட பதிப்பாளர் தேடி வருகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது சுயசரிதையில் பல ரகசியங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.