பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சன்னி லியோன் இவர் தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அதாவது வீரமாதேவி மற்றும் ஓ மை கோல்ட் ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதில் ஓ மை கோல்ட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை சன்னி லியோன் நடிக்கும் இன்னொரு தமிழ் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. டிஜே ஜெய முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் தீ இவன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்க இருப்பதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் அவர்கள் கதாநாயகனாக நடித்து வருகிறார்கள் 28 ஆண்டுகள் கழித்து நடிகை சுகன்யா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார் ஏற்கனவே 1996 ஆம் ஆண்டு வெளியான சீமான் என்ற திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்தில் ராதாரவி, சுமன், ஸ்ரீதர், உள்ளிட்டா பலர் நடித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் முடிய உள்ளதாகவும் கூறப்படுகிறது இந்த படத்தில் சன்னி லியோன் இணைவது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட் மட்டுமல்லாமல் சன்னி லியோன் அவர்களுக்கு தமிழ் ரசிகர்களும் ஏராளமானார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தனது கவர்ச்சியால் பல ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இப்படி அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை சன்னி லியோன் இன்னும் சில ஆண்டுகள் தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.